குலசேகரம் அருகே மாட்டு பண்ணையில் தீ விபத்து ;20 பசுக்கள் காயம்

குலசேகரம் அருகே மாட்டு பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பசுக்கள் காயம் அடைந்தன.

Update: 2022-09-29 18:32 GMT

குலசேகரம், 

குலசேகரம் அருகே மாட்டு பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பசுக்கள் காயம் அடைந்தன.

தீ விபத்து

குலசேகரம் அருகே உள்ள சேக்கல்மடத்து ஏலா பகுதியைச் சேர்ந்தவர் கமலாம்பிகா (வயது45). இவர் அந்த பகுதியில் பசு மாட்டுப் பண்ணை வைத்துள்ளார். இந்த பண்ணையில் 22 பசு மாடுகளும், 5 கன்றுகளும் உள்ளன. இவற்றை வடமாநிலத்ைத சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பராமரித்து வருகிறார்கள். நேற்று காலை 8 மணியளவில் பண்ணையின் மாட்டு கொட்டகை தீ பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் பண்ணையை பராமரிக்கும் வடமாநில குடும்பத்தினரிடம் கூறினர். அவர்கள் விரைந்து வந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்து, பசுக்களையும் கன்றுகளையும் மீட்டனர். இந்த விபத்தில் 20 பசுக்கள் தீக்காயம் அடைந்தன. அவற்றுக்கு கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திற்பரப்பு கிராம நிர்வாக அலுவலர் நவநீதன் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்த பசுமாடுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்