நூற்பாலையில் தீ விபத்து

Update: 2022-12-18 16:30 GMT


வெள்ளகோவில் அருகே உள்ள நாகமநாயக்கன்பட்டியில் தனியார் நூல் மில் உள்ளது. இந்த மில் கடந்த சில மாதங்களாக செயல்பட்டு வருகிறது, இந்த மில்லில் நேற்று பகல் 12 ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென மின்கசிவு காரணமாக கழிவுப்பஞ்சில் தீப்பிடித்தது.

இதை அறிந்த ஊழியர்கள் உடனே வெள்ளகோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இந்ததீ விபத்தில் யாருக்கு எவ்வித காயம் இல்லை, பெரிய சேதமும் இல்லை என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்