கிருஷ்ணகிரியில் கார் தீப்பிடித்து எரிந்தது

கிருஷ்ணகிரியில் கார் தீப்பிடித்து எரிந்தது.;

Update:2022-08-01 19:54 IST

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகரை சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவரது கார் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகில் நேற்று நிறுத்தப்பட்டிருந்தது. அந்த நேரம் திடீரென்று காரின் என்ஜின் பகுதியில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்தது. இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்