வெடி விபத்தில் 2 சிறுவர்களின் கைவிரல்கள் துண்டானது

மதுக்கூர் அருகே வெடி விபத்தில் 2 சிறுவர்களின் கைவிரல்கள் துண்டானது. வெடிக்காத வெடியை வெடிக்க வைக்க முயன்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.

Update: 2023-06-11 21:39 GMT

மதுக்கூர்:

மதுக்கூர் அருகே வெடி விபத்தில் 2 சிறுவர்களின் கைவிரல்கள் துண்டானது. வெடிக்காத வெடியை வெடிக்க வைக்க முயன்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.

கோவில் திருவிழா

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே விக்ரமம் அக்ரஹாரம் கிராமத்தில் கோவில் திருவிழா நடந்தது. இந்த விழாவில் பேராவூரணி பட்டங்காட்டை சேர்ந்த ராஜன் மகன் ராகவன்(வயது 13) கலந்து கொண்டான். இந்த கோவில் திருவிழாவில் வாணவேடிக்கை நடத்தப்பட்டது.சம்பவத்தன்று ராகவனும், விக்ரமம் அக்ரஹாரத்தை சேர்ந்த பரமன் மகன் சரத்(13) என்ற சிறுவனும் வெடிக்காத வாணவெடிகளை சேகரித்தனர்.

சிறுவர்கள் விரல்கள் துண்டானது

பின்னர் அதில் இருந்து வெடிமருந்துகளை எடுத்து ஒரு குழாயில் போட்டு வெடி தயாரித்துள்ளனர். அப்போது அந்த வெடிமருந்து எதிர்பாராதவிதமாக திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் ராகவன், சரத் ஆகியோரின் இடது கை மணிக்கட்டுடன் விரல்கள் துண்டானது. உடனடியாக அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்