சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டிதேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு

சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டிதேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2022-09-09 18:47 GMT

நாகா்கோவில்:

சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டிதேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர் சாம் பொன்னையா. இவர் டிஸ்டிலரி சாலையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இந்தநிலையில் இவரது செல்போனுக்கு வங்கி கணக்கில் இருந்து ரூ.58 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சாம்பொன்னையா, இதுபற்றி சம்பந்தப்பட்ட வங்கியிலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் அளித்தார். ஆனால் மாதக்கணக்கில் காத்திருந்தும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை.

இதனால் வங்கியின் உயர்மட்ட அதிகாரிகள் குழு பிரிவிற்கும் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் நுகர்வோர் இழந்த பணத்தை திரும்ப கொடுக்காமலேயே புகார் முடிக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் மூலம் சாம் பொன்னையாவுக்கு தகவல் வந்தது. இதனால் மனமுடைந்த சாம் பொன்னையா வங்கி கிளை மேலாளரை மீண்டும் அணுகினார். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான சாம் பொன்னையா குமரி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீா் ஆணைய தலைவர் சுரேஷ் மற்றும் உறுப்பினர் சங்கர் ஆகியோர் வங்கியின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோர் இழந்த ரூ.58 ஆயிரம் மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.10 ஆயிரம் நஷ்ட ஈடு, வழக்கு செலவு ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்