நிதி நிறுவன அதிபர் தீக்குளித்து தற்கொலை

உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்த நிதி நிறுவன அதிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

Update: 2022-06-15 13:46 GMT

 சுல்தான்பேட்டை

உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்த நிதி நிறுவன அதிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

நிதி நிறுவன அதிபர்

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட நல்லூர்பாளையத்தை சேர்ந்தவர் செல்லிமுத்து(வயது 53). நிதி நிறுவன அதிபர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

இதற்கிடையில் கருத்து வேறுபாடு காரணமாக அவர்களை பிரிந்த செல்லிமுத்து, தனியாக வசித்து வந்தார். மேலும் குடிப்பழக்கத்துக்கும் அடிமையானார்.

உடல் கருகி...

இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி செல்லிமுத்து, அதே பகுதியில் உள்ள அவரது அக்காள் பரமேஸ்வரி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். இதை அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை

மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, அவர் தற்கொலை செய்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். இது தவிர சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.இதையடுத்து பிரேத பரிசோதனை அறிக்கையில், செல்லிமுத்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது அம்பலமானது.இதனால் போலீசார் சந்தேக மரண வழக்கை தற்கொலை வழக்காக மாற்றி உள்ளனர். மேலும் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்