அழிஞ்சல்பட்டு கூட்டுறவு வங்கியில் நிதி சார் கல்வி விழிப்புணர்வு முகாம்

அழிஞ்சல்பட்டு கூட்டுறவு வங்கியில் நிதி சார் கல்வி விழிப்புணர்வு முகாம் நடந்தது.

Update: 2022-08-24 12:19 GMT

தூசி

அழிஞ்சல்பட்டு கூட்டுறவு வங்கியில் நிதி சார் கல்வி விழிப்புணர்வு முகாம் நடந்தது.

வெம்பாக்கம் தாலுகா அழிஞ்சல்பட்டு கிராமத்தில் மாங்கால் கூட்ரோடு மத்திய கூட்டுறவு வங்கி கிளை சார்பில் நிதி சார் கல்வி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கிளை மேலாளர் பி.ஜெயந்தி தலைமை தாங்கினார் ஊராட்சி மன்ற தலைவர் ஷகிலா மற்றும் வார்டு உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளிகள், மகளிர் சுய உதவி குழுவினர்கள் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்

முகாமில் வங்கி மூலம் வழங்கப்படும் சேவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன்கள், கால்நடை பராமரிப்பு மூல தான கடன், கைம்பெண்களுக்கான உதவி கடன், நடமாடும் ஏ.டி.எம்., நடமாடும் வாகனம் மூலம் கணக்கு தொடங்ககுதல் ஆகியன குறித்து விளக்கப்பட்டது.

தொடர்ந்து கறவை மாட்டு கடன், மாற்றுத்திறனாளி கடன,் சிறுகுறு தொழில் கடன்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. முகாமில் வங்கி உதவியாளர் எஸ். தீபா, காசாளர் எஸ்.சபரிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்


Tags:    

மேலும் செய்திகள்