தேசிய தடகள போட்டியில் பங்கேற்கும் மாணவிக்கு நிதி உதவி

நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் சார்பில் தேசிய தடகள போட்டியில் பங்கேற்கும் மாணவிக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

Update: 2023-10-06 21:01 GMT

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா கல்லூத்து தெற்கு தெருவை சேர்ந்த ராஜராஜன் நாடார் என்பவருடைய மகள் ஆர்.அபிநயா. இவர் தடகள போட்டியில் இந்தியா சார்பில் பங்கு பெற்று தங்கம், வெள்ளி போன்ற பதக்கங்களை பெற்றுள்ளார். மேலும் தற்போது தேசிய அளவிலான போட்டி ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரிலும், தென் இந்திய அளவிலான போட்டி தெலுங்கானா மாநிலம் வாராங்காலிலும் நடைபெற உள்ளது. இதில் மாணவி ஆர்.அபிநயாவும், பயிற்சியாளரும் பங்கு பெறுகின்றனர். தான் ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் மேற்படி போட்டிகளில் கலந்துகொள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்கத்தில் இருந்து நிதிஉதவி கேட்டு மாணவி மனு கொடுத்திருந்தார். இதனை சங்க நிர்வாகிகள் பரிசீலனை செய்து மாணவிக்கு நிதி உதவி வழங்க முடிவு செய்தனர்.

அதனை தொடர்ந்து நேற்று சங்க செயலாளர் டி.ராஜ்குமார் நாடார், மாணவி ஆர்.அபிநயாவிடம் ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார். மாணவியின் தந்தை ராஜராஜன், சங்க மேலாளர் முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் உலக ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கினார். தேசிய தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் முன்னிலை வகித்தார். மாணவி ஆரோக்கிய விபிஷா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலய தர்மகத்தா டாக்டர் ஜெபஸ்டின் ஆனந்த், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மரிய சிலுவை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கல்லூரிக்கு தேசிய தர மதிப்பீட்டு குழு மூலமாக ஏ கிரேடு கிடைப்பதற்கு பணியாற்றிய புஷ்பராஜ், கல்லூரி முதல்வர் ராஜன், கல்லூரி செயலர் வி.பி.ராமநாதன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். விழாவில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்