போலீஸ்காரரின் குடும்பத்திற்கு நிதி உதவி

விபத்தில் இறந்த போலீஸ்காரரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

Update: 2023-09-30 19:40 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே அய்யாபுரம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் பாலசுப்பிரமணியன். கடந்த 2009-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சேர்ந்த இவர், கடந்த மே மாதம் 9-ந்தேதி பணி முடிந்ததும் வீடு திரும்பியபோது சண்முகநல்லூரில் டிராக்டர் மோதி உயிரிழந்தார்.

2009-ம் ஆண்டு பணியில் சேர்ந்த போலீஸ் நண்பர்கள், இதுவரையிலும் விபத்து, இயற்கை மரணம் அடைந்த சக போலீசார் 17 பேரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கினர். அதன்படி 2009-ம் ஆண்டு பேட்ஜ் போலீசார் சுமார் 4,700 பேரும் வசூல் செய்து பாலசுப்பிரமணியன் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி, சங்கரன்கோவில் பழைய நகராட்சி அலுவலகம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. பாலசுப்பிரமணியன் குடும்பத்தினருக்கு 2009-ம் ஆண்டு பேட்ஜ் போலீசார் ரூ.24 லட்சத்து 79 ஆயிரத்து 447 நிதி உதவியாக வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்