பெற்றோரை இழந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு நிதி உதவி

பெற்றோரை இழந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

Update: 2022-08-07 14:45 GMT

தென்காசி அருகே உள்ள சாம்பவர் வடகரை மேலூர் அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கும் பெற்றோரை இழந்த மாணவ - மாணவிகளுக்கு தபால் நிலையத்தில் சுகன்யா சம்ருதி திட்டத்தின் கீழ் வைப்பு நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மாவட்ட அலுவலர் குணசேகரன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை பகவதி வரவேற்றார். 10 மாணவ-மாணவிகளுக்கு வைப்பு நிதிக்கான கணக்கு புத்தகங்களை அதிகாரி குணசேகரன் வழங்கி பேசினார். மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் 10 மாணவர்களுக்கான ரூ.50 ஆயிரத்தை தலைமை ஆசிரியை பகவதி தனது சம்பளத்தில் இருந்து வழங்கியதை அதிகாரிகள் பாராட்டினர்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஹரிஹரன், யோகா ஆசிரியர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

-------------

Tags:    

மேலும் செய்திகள்