கவர்னர் மாளிகை செலவுக்கான விளக்கம் எங்கே? - நிதி மந்திரி பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி

செலவு செய்த 11 கோடியே 32 லட்ச ரூபாய்க்கான விவரங்கள் எதுவும் அரசுக்கு வழங்கப்படவில்லை என்று நிதிமந்திரி தெரிவித்துள்ளார்.

Update: 2023-04-10 08:10 GMT

சென்னை,

கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தனி தீர்மானத்தை கொண்டுவந்தார். முதல்-அமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் முன்மொழிந்தார். தமிழ்நாடு கவர்னருக்கு உரிய அறிவுரை வழங்க மத்திய அரசு, குடியரசு தலைவரை வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தீர்மானம் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது நிதி மந்திரி பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், ஒதுக்கப்பட்ட 18 கோடி ரூபாயில் 11.32 கோடி ரூபாய் கவர்னர் மாளிகை கணக்கிற்கு மாற்றபட்டுள்ளது.

கவர்னர் மாளிகை செலவு செய்த 11.32 கோடி ரூபாய்க்கான செலவு விவரங்கள் எதுவும் அரசுக்கு வழங்கப்படவில்லை. அட்சய பாத்திரம் என்ற பெயரை சொல்லி கவனர் மாளிகை கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.

யுபிஎஸ்சி மாணவர்கள் கூட்டத்திற்கு 5 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. ஊட்டி ராஜ்பவனில் நடந்த கலாசார நிகழ்வுக்கு 3 லட்ச ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

கவர்னர் மாளிகை செலவினங்களில் விதிமீறல்கள் தடுக்கப்படும். விதிமுறைகளில் படிதான் செலவு செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடுகளை முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின் பெயரில் உடனடியாக கொண்டுவருவேன் என்று உறுதியாக கூறுகிறேன்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்