முத்துரங்கம் அரசு கல்லூரியில் நாளை இளங்கலை பாடப்பிரிவுகளுக்கான இறுதிகட்ட கலந்தாய்வு

முத்துரங்கம் அரசு கல்லூரியில் நாளை இளங்கலை பாடப்பிரிவுகளுக்கான இறுதிகட்ட கலந்தாய்வு நடக்கிறது.

Update: 2022-09-28 18:45 GMT

வேலூர்

முத்துரங்கம் அரசு கல்லூரியில் நாளை இளங்கலை பாடப்பிரிவுகளுக்கான இறுதிகட்ட கலந்தாய்வு நடக்கிறது.

வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவுகளுக்கான இறுதிகட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. தமிழ், ஆங்கிலம், பொருளியல் உள்ளிட்ட 12 வகையான பாடப்பிரிவுகளில் நிரப்பப்படாமல் உள்ள எஞ்சியுள்ள இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இணைய வழி விண்ணப்பித்து கலந்தாய்வில் கலந்து கொள்ளதவர்கள் இதில் பங்கேற்கலாம். கலறந்தாய்வுக்கு மாணவர்கள் வரும்போது அனைத்து அசல் மற்றும் நகலுடன் சான்றிதழ்களை கொண்டுவரவேண்டும். சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே சேர்க்கை உறுதி செய்யப்படும் என கல்லூரி முதல்வர் மலர் தெரிவித்துள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்