வானில் வட்டமடித்த போர் விமானங்கள்
பழனி பகுதியில் போர் விமானங்கள் வானில் வட்டமடித்தன.
கோவை மாவட்டம் சூலூர் விமான பயிற்சி பள்ளியில் இருந்து, அவ்வப்போது பழனி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பயிற்சி விமானங்கள் வானில் வட்டம் விடுவது வழக்கம். அதன்படி நேற்று மதியம் 12 மணி அளவில் 3 போர் விமானங்கள், பழனி பகுதியில் வானில் சாகசம் செய்தபடி 2 முறை வட்டமடித்தன. காதுகளை பிளக்கும் வகையில், அதிக சத்தத்துடன் சென்றதால் பொதுமக்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர். போர் விமானங்களை, பழனி பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கண்டுகளித்தனர்.