வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு களப்பயிற்சி

தளிக்கோட்டை ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு களப்பயிற்சி அளிக்கப்பட்டது

Update: 2022-07-05 17:19 GMT

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம், தளிக்கோட்டை ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு நேரடி களப்பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், பட்டுக்கோட்டை ஆர்.ஐ.ஆர்.டி. இணை இயக்குனர் பாலகுரு, நீடாமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அன்பழகன், பயிற்றுனர் தமிழ்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு 50-க்கும் மேற்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஊராட்சி மன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் பணிகளை எடுத்துக் கூறினர். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் ப.சரவணன் செய்திருந்தார். இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர், விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்