மாரியம்மன்-ரேணுகாதேவி அம்மன் கோவில் திருவிழா தொடங்கியது

மாரியம்மன்-ரேணுகாதேவி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Update: 2023-03-14 18:45 GMT

திருப்புவனம், 

திருப்புவனம் புதூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் மற்றும் ரேணுகாதேவி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி இந்த ஆண்டிற்கான விழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக புஷ்பவனேஸ்வரர்- சவுந்திரநாயகி அம்மன் கோவிலில் இருந்து உற்சவர் மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர். அதன் பின்பு மாரியம்மன் கோவிலில் உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து கொடிமரத்திற்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து கொடி மரம், மாரியம்மன், ரேணுகாதேவி அம்மன் மற்றும் உற்சவ சுவாமிகளுக்கு காப்பு கட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 21-ந்தேதி பொங்கல், மா விளக்கு வைக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

Tags:    

மேலும் செய்திகள்