பூவாடை காரியம்மன் கோவில் திருவிழாவில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி
கம்பைநல்லூரில் பூவாடை காரியம்மன் கோவில் திருவிழாவில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.
மொரப்பூர்:
கம்பைநல்லூரில் பூவாடை காரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவையொட்டி மாணிக்கவாசகர் பன்னிரு திருமுறை மன்றத்தினால் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து வீடு தோறும் மஞ்சள், குங்குமம், புஷ்பம் வழங்குதல் நிகழ்ச்சியும், அக்கரைபட்டியான் சாமிக்கு அர்த்த ஜாம பூஜையும் நடைபெற்றது. இன்று (புதன்கிழமை) பூவாடை காரியம்மனுக்கு தாய் வீட்டு சீர்வரிசை அழைத்தல், அம்மன் மற்றும் பூ கூடைக்கு பூஜைகள், கும்ப பூஜை நடைபெறுகிறது. நாளை (வியாழக்கிழமை) பூவாடை காரியம்மனுக்கு மறு பூஜையும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.