ஆனி திருமஞ்சனத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

ஆனி திருமஞ்சனத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

Update: 2022-07-06 16:37 GMT

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் திருஞானசம்பந்தர் மடாலயத்தில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி காலை முதல் மதியம் வரை நடராஜருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் மற்றும் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கைலாய வாத்தியம் முழங்க, தேவாரம், திருவாசக ஓதலுடன் சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு மகா தீபாராதனை செய்யப்பட்டது. பின்னர் நடராஜர் வெள்ளி கவசத்திலும், சிவகாம சுந்தரி தங்க கவசத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்