விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள், இடுபொருட்கள்
நாகையில் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள், இடுபொருட்களை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்.
சிக்கல்:
சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் மற்றும் இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தார். குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் உரங்கள் மற்றும் இடுபொருட்களை 12 விவசாயிகளுக்கு கலெக்டர் வழங்கினார். இதில் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அகண்ட ராவ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெங்கடேசன், உதவி வேளாண்மை இயக்குனர் (பொறுப்பு) புஷ்கலா, ராஜலட்சுமி மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.