தூக்குப்போட்டு பெண் தற்கொலை

நடத்தையில் கணவருக்கு சந்தேகம்: தூக்குப்போட்டு பெண் தற்கொலை

Update: 2023-05-15 18:45 GMT

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை வி.கே.எஸ்.கார்டன் பகுதியில் வசித்து வருபவர் முத்து(வயது 35). இவரது மனைவி பழனியம்மாள்(30). இவர்களுக்கு திருமணமாகி 12 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.

இந்த நிலையில் பழனியம்மாளின் நடத்தையில் முத்துவுக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த பழனியம்மாள் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு கொண்டார். இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி பழனியம்மாள் பரிதாபமாக இறந்தார். இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்