பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
வையம்பட்டி:
மணப்பாறையை அடுத்த அமயபுரம் அருகே உள்ள மயிலாப்பூர் களத்து வீட்டை சேர்ந்தவர் செபஸ்தியான். இவரது மனைவி இன்னாசி அம்மாள்(வயது 38). இவர் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் வயிற்று வலியால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததாக கூறப்படுகிறது.