தூக்குப்போட்டு பெண் தற்கொலை

தூக்குப்போட்டு பெண் தற்கொலை

Update: 2022-12-17 18:45 GMT

மேட்டுப்பாளையம்

சிறுமுகை பாரதிநகரை சேர்ந்தவர் செட்டியப்பன். தொழிலாளி. இவருடைய மனைவி ராதா. இவர்களுடைய மூத்த மகள் பவித்ரா. இவருக்கு மணிகண்டன் என்பவருடன் திருமணம் முடிந்து 1½ வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் குடும்ப பிரச்சிைன காரணமாக பவித்ரா கணவரிடம் கோபித்துக் கொண்டு குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்கு வந்து கடந்த 8 மாதமாக வசித்து வருகிறார்.


மேலும் பவித்ரா மற்றும் குழந்தையை பார்க்க மணிகண்டன் வரவில்லை என்று தெரிகிறது. இதுபற்றி ராதா தனது மகளிடம் கேட்டபோது அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. மகள் கணவரை பிரிந்து வந்ததால் வாழ்க்கை யில் விரக்தி அடைந்த ராதா வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்