தூக்குப்போட்டு பெண் தற்கொலை

வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாததால் தூக்குப்ேபாட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-07-28 18:36 GMT

வங்கியில் கடன்

கரூர் மண்மங்கலம் அருகே உள்ள சோமூர் குடித்தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி கலா (வயது 38). இவர் கூட்டுறவு வங்கியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.50 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். இந்தநிலையில் கூலி வேலைக்கு சென்று வந்த கலாவால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார்.

இதனால் மனம் உடைந்து காணப்பட்ட கலா சம்பவத்தன்று வீட்டில் தூக்கில் தொங்கினார்.

தற்கொலை

இதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கலா பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தற்கொலை குறித்த புகாரின்பேரில், வாங்கல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் உதயக்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்