பெண் தற்கொலை

சாணார்பட்டி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-11-22 16:53 GMT

சாணார்பட்டி அருகே உள்ள மொட்டையகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் முருகன். அவருடைய மனைவி சமயலட்சுமி (வயது 50). இவர்கள் 2 பேரும், கேரளாவில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தனர். சமயலட்சுமி வயிற்றுவலியால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கணவன்-மனைவி 2 பேரும் மொட்டையகவுண்டன்பட்டிக்கு வந்து விட்டனர். இங்கு வயிற்றுவலிக்காக சமயலட்சுமி சிகிச்சை பெற்றார். இருப்பினும் வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த அவர், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர்பவுல்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்