கிணற்றில் பெண் பிணம்

பனவடலிசத்திரம் அருகே கிணற்றில் பெண் பிணம் கிடந்தது. அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-11-18 18:45 GMT

பனவடலிசத்திரம்:

தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே உள்ள கீழநீலிதநல்லூர் கிராமம் யாதவர் தெருவை சேர்ந்த வேலு பண்டிதர் என்பவரது மனைவி உச்சமாகாளி (வயது 85). நேற்று காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற இவர் வெகு நேரமாகி ஆகியும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் ஊர் பொது கிணற்றில் தேடிபார்த்தபோது உச்சி மாகாளி உடல் மிதந்தது தெரியவந்தது.

இதுகுறித்து சங்கரன்கோவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி உச்சி மாகாளியின் உடலை மீட்டனர். இதுபற்றி பனவடலிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உச்சிமாகாளியின் உடலை பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்