தேர்தல் களத்தில் உங்களை வெற்றி பெற்றதற்கு மீண்டும் ஒரு முறை மகிழ்கிறேன் - வானதி சீனிவாசன்

பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் 'விக்ரம்' படத்தை பார்த்து பாராட்டி உள்ளார்.

Update: 2022-07-04 21:24 GMT

சென்னை,

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜூன் 03-ஆம் தேதி திரைக்கு வந்த படம் விக்ரம். விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் 'விக்ரம்' படத்தை பார்த்து பாராட்டி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், '' தேர்தல் களத்தில் உங்களை வெற்றி பெற்றதற்கு மீண்டும் ஒரு முறை மகிழ்கிறேன். விக்ரம் திரைப்படம் பார்த்தேன். உங்கள் கலை பணியால் தொடர்ந்து மக்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள்''. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

கடந்த சட்டபேரவை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனை தோற்கடித்து வானதி சீனிவாசன் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்