டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
அறச்சலூர்
ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கவுதம் பிரசாத் (வயது 33). இவர் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி செய்து வந்தார். இவர் ஈரோட்டில் இருந்து திருப்பூர் மாவட்டம் காங்கேயத்துக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அறச்சலூரை அடுத்த கண்ணம்மாபுரம் அருகே சென்றபோது கவுதம் பிரசாத்தின் மோட்டார்சைக்கிள் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோதியது. இந்த விபத்தில் கவுதம் பிரசாத் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இதுபற்றி அறிந்ததும் அறச்சலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கவுதம் பிரசாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.