நெல் விவசாய பணி தீவிரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் பயிரிட பல கிராமங்களில் விவசாய நிலங்களை சமதளப்படுத்தி டிராக்டர் மூலம் உழும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2022-06-26 15:49 GMT

முதுகுளத்தூர், 

ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் பயிரிட பல கிராமங்களில் விவசாய நிலங்களை சமதளப்படுத்தி டிராக்டர் மூலம் உழும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விதை நெல்

ராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்தவரை வானம் பார்த்த பூமி என்று தான் சொல்ல வேண்டும். மாவட்டத்தில் நெல், மிளகாய், பருத்தி எள் வேர்கடலை உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகின்றன.

அதுபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் மிளகாய் சீசன் முழுமையாக முடிவடைந்து உள்ளதுடன், பருத்தி சீசனும் விரைவில் முடிவடைய உள்ளது. வழக்கமாக ஆடி மாதம் பிறந்த பின்னரே விவசாய நிலங்களில் டிராக்டர் மூலம் உழுது விதை நெல் தூவும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு விடுவது வழக்கம்.

இந்த நிலையில் ஆடி மாதம் பிறக்க இன்னும் சில வாரங்கள் உள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் தாலுகாவை சுற்றிய பல கிராமங்களில் விவசாயிகள் தற்போது விவசாய நிலங்களில் டிராக்டர் மூலம் சமதளப்படுத்தி உழும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தீவிரம்

முதுகுளத்தூர் அருகே பல கிராமங்களில் மிளகாய் மற்றும் பருத்தி நடப்பட்டிருந்த செடிகளை அகற்றி நெல் விதைகளை தூவுவதற்காக டிராக்டர் மூலம் விவசாய நிலங்களை சமதளப்படுத்தி தயார் செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாகவே ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டை பொறுத்தவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை சீசனில் விவசாயிகள் எதிர்பார்த்ததை விட அதிக அளவு மழை பெய்ததுடன் நெல் விளைச்சலும் மாவட்டத்தில் பல ஊர்களில் நன்றாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் ஆர்.எஸ். மங்கலம் அருகே மங்கலம் உள்ளிட்ட மாவட்டத்தில் பல கிராமங்களிலும் விவசாய நிலங்களில் டிராக்டர் மூலம் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்