காய்கறி சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்

பாரம்பரிய காய்கறி சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பிரபுசங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-09 18:16 GMT

விருது

தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பில் மாவட்ட அளவில் பாரம்பரிய காய்கறி சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மாவட்ட கலெக்டரால் அரசு நிகழ்ச்சியின் போது சான்றிதழ்களுடன் விருது வழங்கப்பட உள்ளது. முதல் பரிசு ரூ.15 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.10 ஆயிரம். பாரம்பரிய காய்கறிகள் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கான விருதுக்கு சொந்த அல்லது குத்தகை நிலத்தில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் பங்கு பெறலாம்.

விவசாயிகள் அதிக பாரம்பரிய காய்கறி ரகங்களை மீட்டு எடுத்தல், பிற விவசாயிகளிடம் பாரம்பரிய காய்கறி விதைகளை கொண்டு சேர்த்தல், நீர் மேலாண்மை, முறையான மண்வளம் மேம்பாடு, அங்கக முறையில் விதைகளை மீட்டெடுத்தல் ஆகிய காரணிகளின் அடிப்படையில் மாவட்ட அளவிலான நிபுணர் குழுவின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கலாம்

மாவட்ட கலெக்டர் தலைமையில் தோட்டக்கலை இணை, துணை இயக்குனர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஆகியோர் அடங்கிய தேர்வு குழு மாவட்ட அளவிலான விருது பெறும் 2 விவசாயிகளை ஆய்வு செய்து தேர்ந்தெடுப்பர். விண்ணப்பப்படிவம் துறை இணையதளமான https://www.tnhorticulture.tn.gov.in மற்றும் மாவட்ட அலுவலகங்களில் கிடைக்கும். விவசாயிகள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட அல்லது வட்டார அலுவலகங்களில் சமர்ப்பிக்க லாம் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்