விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தென்காசியில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update:2022-10-04 00:15 IST

திருமங்கலத்தில் இருந்து தென்காசி மாவட்டம் செங்கோட்டை வரை நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணி விளைநிலங்கள் வழியாக நடப்பதால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுவதாக கூறி போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இதற்காக போராடிய ஜெயராமன் என்ற விவசாயி மீது குண்டர் தடுப்பு சட்டம் மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்தும், இந்த வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் தென்காசி புதிய பஸ்நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கணபதி தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன், மாநிலச் செயலாளர் விஜய முருகன், மாவட்ட துணைத் தலைவர் வேலுமயில், மாவட்ட தலைவர் வேணுகோபால், மாவட்ட பொருளாளர் திருமலை குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்