விவசாயிகள் டிராக்டர் பேரணி
கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி;
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி டிராக்டர் பேரணி நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின் மணி தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் டி.ஏழுமலை, மாவட்ட துணை செயலாளர் எம்.வி.ஏழுமலை, பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ராமசாமி பேரணியை தொடங்கி வைத்தார். கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளி முன்பு இருந்து புறப்பட்ட இந்த பேரணி துருகம் சாலை, நான்குமுனை சந்திப்பு, காந்திரோடு வழியாக மந்தைவெளியை சென்றடைந்தது. அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் கண்டன உரையாற்றினார். இதில் விவசாய சங்க மாவட்ட அமைப்பாளர் சுப்பிரமணி, துணை அமைப்பாளர் கஜேந்திரன் மற்றும் ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.