விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என வேளாண் அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2022-10-09 14:14 GMT

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என வேளாண் அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆயத்த பணிகள்

வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு ஆயத்த பணிகள் மேற்கொள்ள வேளாண்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2022-2023-ம் ஆண்டில் சுமார் 40 லட்சம் ஏக்கர் சாகுபடி பரப்பளவுக்கு காப்பீடு செய்யவும், சுமார் 26 லட்சம் விவசாயிகள் பதிவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது சம்பா நெற்பயிர் சாகுபடி முழு வீச்சில் நடைபெற்று வரும் வேளையில் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை மூலம் மிதமான முதல் கனமழை பெய்து வருவதால் பயிர் சேதமடைய வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயிர் காப்பீடு

வேலூர் மாவட்டத்தில் சம்பா பருவ நெற்பயிருக்கு அடுத்த மாதம் 15-ந் தேதி வரை காப்பீடு செய்யலாம். காப்பீட்டுக் கட்டணமாக நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.495 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே சம்பா பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளும் கடன் பெறும் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு வங்கிகளில், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில், கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்களில் (இ-சேவை மையங்கள்), தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் உள்ள விவசாயிகள் கார்னரில் நேரிடையாக காப்பீடு செய்யலாம்.

விவசாயிகள் அனைவரும் கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே தங்களது பயிரை காப்பீடு செய்ய வேண்டும். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு பயிர் காப்பீடு இணையதளம் அல்லது மற்றும் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அல்லது வேளாண்மை அலுவலர் அல்லது உதவி வேளாண்மை அலுவலர் அல்லது வங்கிகளை அணுகலாம் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்