குறுவை பயிரை காப்பாற்றும் விவசாயிகள்
வைரப்பெருமாள்பட்டி கிராமத்தில் குறுவை பயிரை காப்பாற்ற ஆயில் என்ஜின் வைத்து தண்ணீர் இறைத்து வயல்களுக்கு பாய்ச்சு விவசாயிகள் போராடி வருகின்றனர்.
வைரப்பெருமாள்பட்டி கிராமத்தில் குறுவை பயிரை காப்பாற்ற ஆயில் என்ஜின் வைத்து தண்ணீர் இறைத்து வயல்களுக்கு பாய்ச்சு விவசாயிகள் போராடி வருகின்றனர்.
ஆயில் என்ஜின்
பூதலூர் அருகே கல்லணை கால்வாய் கரை ஓரம் உள்ள விவசாய கிராமம் வைரப்பெருமாள்பட்டி. இந்த கிராமத்தில் தற்போது கல்லணை கால்வாய் மூலம் தண்ணீர் பெற்று குறுவை சாகுபடி செய்துள்ளனர். கல்லணை கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்ட நாளில் இருந்து குறைந்த அளவில் தண்ணீர் விடப்படுகிறது. இதனால் பல்வேறு கிளை வாய்க்கால்களில் போதுமான அளவு தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் வைரப்பெருமாள்பட்டி கிராமத்தில் உள்ள விவசாயிகள் கிளை வாய்க்கால்களில் தலைப்பு பகுதியில் ஆயில் என்ஜின் வைத்து தண்ணீர் இறைத்து குறுவை வயல்களுக்கு பாய்ச்சி வருகின்றனர்.
குறுவை பயிரை காப்பாற்ற போராட்டம்
வயலுக்கு உரம் இடுதல், களை பறித்தல், பூச்சி கட்டுப்பாடு மருந்து தெளிப்பு என அனைத்தையும் செய்து விட்டு தண்ணீர் இல்லாமல் வயலை காய விட்டு விளைச்சல் பாதிப்பு ஏற்படும் என்பதால் விவசாயிகள் அதிக செலவு செய்து தண்ணீர் இறைத்து பாய்ச்சி வருகின்றனர். மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு போதிய அளவில் இல்லை. மழைபெய்யாவிட்டால் வைரப்பெருமாள்பட்டி கிராமத்தில் குறுவை பொய்த்து போகும் நிலையில் தண்ணீர் இறைத்து குறுவை பயிரை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகி்ன்றனர். கர்நாடக அரசை வற்புறுத்தி காவிரி நீரை பெற்று விவசாயிகள் குறுவை பயிர் செய்து பயன் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடு்த்துள்ளனர்.