ேசாப்புநுரை நீர்க்குமிழி பறக்க விட்டு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டை கண்டித்து வந்தவாசியில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் பங்கேற்க வந்த விவசாயிகள் சோப்பு நுரை நீர் குழிழி விட்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-11 18:45 GMT

வந்தவாசி

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டை கண்டித்து வந்தவாசியில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் பங்கேற்க வந்த விவசாயிகள் சோப்பு நுரை நீர் குழிழி விட்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறைதீர்வு கூட்டம்

வந்தவாசி தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. தாசில்தார் ராஜேந்திரன், வேளாண் துணை இயக்குனர் ஏழுமலை, வேளாண் உதவி இயக்குனர் பாண்டி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இதில் விவசாயிகள் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். முன்னதாக தமிழக வேளாண் பட்ஜெட்டை கண்டித்து அலுவலகம் முன் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் சோப்பு நுரை நீர்க்குமிழி விட்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எப்படி உயரும்

இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

தமிழக வேளாண் பட்ஜெட் மூலம் விவசாயிகளின் தனிநபர் வருமானம் ரூ.3 லட்சமாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மல்லிகைப்பூ, முருங்கை, மணிலா, துவரை உள்ளிட்ட சாகுபடிக்கு குறைந்த அளவிலேயே அதாவது பைசா கணக்கில் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 60 சதவீதம் பேர் வேளாண் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த ஒதுக்கீட்டை கணக்கிட்டால் ஒவ்வொரு விவசாயிக்கும் பைசா கணக்கிலேயே ஒதுக்கீடு வருகிறது.

இதன் மூலம் விவசாயிகளின் தனிநபர் வருமானம் எப்படி உயரும். எனவே தமிழக வேளாண் பட்ஜெட்டை கண்டித்து நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்