விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
போளூரில் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போளூர்
போளூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று இரவு காமராஜர் சிலை அருகில் டார்ச் லைட் ஒளிவீச்சில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாவட்ட செயலாளர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.
விவசாயிகள் 13 மாத போராட்டத்தில் கோரிக்கைகளை ஒப்புதல் அளித்தபடி உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
மின்சார கட்டண உயர்வை உடனே வாபஸ் பெற வேண்டும்.
அரிசி, மாவு, தயிர் அன்றாட அத்தியாவசிய உணவு பொருட்கள் மீது விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளை கண்டித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.