விவசாயிகள் மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திட்டக்குடியில் விவசாயிகள் மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-07-07 18:45 GMT

திட்டக்குடி,

திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தலைவர் தயா பேரின்பம் தலைமை தாங்கினார். திட்டக்குடி தாலுகாவில் கால்நடை துறை மூலம் செயல்படும் திட்டங்களில் ஆதிதிராவிட பொதுமக்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், கால்நடைத்துறை மூலம் பல ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் பயன்அடைந்தவர்களின் பெயர் பட்டியலை கிராம வாரியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். போலி கால்நடை மருத்துவர்கள், அவர்களுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியினர் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்