விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
சங்கரன்கோவிலில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது
சங்கரன்கோவில் உதவி கலெக்டர் சுப்புலெட்சுமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சங்கரன்கோவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் சங்கரன்கோவில் உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.