விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
கரூர் மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் மாவட்ட கலெக்டர் தலைமையில் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் தவறாது விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதுசமயம் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி, முக கவசம் அணிந்து கலந்து கொண்டு பயன் பெறலாம் என கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.