எசனை துணை மின் நிலைய பாதையை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

சேறும், சகதியுமாக காட்சியளிக்கும் எசனை துணை மின் நிலைய பாதையை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-06-08 18:55 GMT

பெரம்பலூர் மாவட்டம் எசனை மலைப்பகுதி அருகே துணை மின் நிலையம் உள்ளது. இந்த துணை மின் நிலையத்திலிருந்து வேப்பந்தட்டை, பாளையூர், தொண்டப்பாடி, அனுக்கூர், ஆலம்பாடி, செஞ்சேரி, மேலப்புலியூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் எசனையிலிருந்து துணை மின் நிலையம் வரை செல்லக்கூடிய பாதை குண்டும் குழியுமாக கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இந்த சாலையில் உள்ள பள்ளங்களில் மழைக்காலங்களில் நீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்திற்கு தினசரி சென்று வரக்கூடிய மின்வாரிய அலுவலர்களும், தளவாடப்பொருட்கள் ஏற்றி சென்று வரக்கூடிய மின் பணியாளர்களும், அந்த வழியாக விவசாய நிலங்களுக்கு செல்லக்கூடிய 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளும் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே குண்டும் குழியுமான சாலையை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்