முசிறியில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்காவிட்டால் மறியல் நடத்த விவசாயிகள் முடிவு

முசிறியில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்காவிட்டால் மறியல் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

Update: 2023-04-10 16:50 GMT

முசிறியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு பள்ளவாய்க்கால் பகுதி விவசாயிகள் விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட கோரி மனு கொடுப்பதற்காக வந்து இருந்தனர். ஆனால் அங்கு அதிகாரிகள் இல்லை. இதனையடுத்து அவர்கள் அங்கு இருந்த அலுவலக பணியாளர்களிடம் முறையிட்டனர். இதனையடுத்து அலுவலகப் பணியாளர் விவசாயிகள் வந்த விவரத்தை உதவி செயற்பொறியாளர் கொளஞ்சி நாதனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவர் புதன்கிழமைக்குள் விவசாயத்துக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படு்ம் என்று தெரிவித்தார். இதனையடுத்து விவசாயிகள் அங்கு இருந்து சென்றனர். இது குறித்து விவசாயிகள் கூறும்போது, பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு இதேபோல் 3 முறை மனு கொடுக்க வந்துள்ளோம். ஆனால் அதிகாரிகள் இல்லை. இதனால் விவசாய நிலங்கள் தண்ணீர் இன்றி வறண்டு விட்டன. இனிமேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயிகள் சங்கம் மூலம் முசிறியில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்