விவசாயிகள், வியாபாரிகள் கலந்துரையாடல் கூட்டம்
வாணியம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகள், வியாபாரிகள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
வாணியம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகள், வியாபாரிகள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வேளாண் வணிகத்துறையின் வேளாண்மை துணை இயக்குனர் செல்வராஜ், வேளாண் விற்பனைக்குழு செயலாளர் சு.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடையே கலந்துரையாடல் நடத்தினர்.
வாணியம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நெல், மணிலா, கரும்பு, வெல்லம் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை அதிகமாகக் கொண்டுவந்து நல்ல விலைக்கு விற்று விவசாயிகள் பயனடைய தேவையான கருத்துக்களை விவசாயிகளும், வியாபாரிகளும் தெரிவித்தனர்.
உழவர் உற்பத்தியாளர் குழுவினர், இளையநகரம், கலந்திரா, வளையாம்பட்டு, வெள்ளகுட்டை மற்றும் நெக்குந்தி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் நெல், மணிலா, தேங்காய், கரும்பு வெல்லம் வியாபாரம் செய்யும் வணிகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.