விவசாயி தற்கொலை
ஆலந்துறை அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆலாந்துறை
ஆலாந்துறை அருகே உள்ள பெருமாள் கோவில்காடு பகுதியைச் சேர்ந்தவர் காளிச்சாமி (வயது 40), விவசாயி. சம்பவத்தன்று இவர் தோட்டத்தில் உள்ள வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காருண்யா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் காளிச்சாமியின் தாய், மற்றும் தம்பியை அருகில் உள்ள தோட்டத்தை சேர்ந்த தங்கவேல், அவரது மனைவி ராதாமணி, மகன் சந்துரு மற்றும் ராமசாமி, தேவாத்தாள் ஆகியோர் சேர்ந்து தாக்கியதோடு, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் மன விரக்தியில் காளிச்சாமி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.