புதுப்பேட்டை அருகே கார் மோதி விவசாயி பலி
புதுப்பேட்டை அருகே கார் மோதி விவசாயி உயிாிழந்தாா்.;
புதுப்பேட்டை,
பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் (வயது 55), விவசாயி. இவர் நேற்று காலை சிறுப்புலியூரை சேர்ந்த சின்னையன் என்பவருடன் ஒரு மொபட்டில் சேமக்கோட்டைக்கு வந்து கொண்டிருந்தார். புதுப்பேட்டை அடுத்த திருவாமூர் பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கார் ஒன்று, இவா்கள் வந்த மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் பன்னீர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த சின்னையன் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.