கார் மோதி விவசாயி பலி

கார் மோதி விவசாயி பலியானார்.;

Update:2023-01-05 23:53 IST

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா அய்யலூர் பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜ் (வயது 50), விவசாயி. இவர் தனது மொபட்டில் நாட்டார்மங்கலத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சி டோல்கேட் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (55) என்பவர் தனது காரில் செட்டிகுளம் முருகன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மொபட் மீது கார் மோதியது. இதில் படுகாயம் அடைந்த ரங்கராஜை அப்பகுதி மக்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ரங்கராஜ் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்