கார் மோதி விவசாயி பலி

சின்னசேலம் அருகே கார் மோதி விவசாயி பலி

Update: 2022-08-22 18:34 GMT

சின்னசேலம்

சின்னசேலம் அருகே கனியாமூர், பாலத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன்(வயது 66). விவசாயியான இவர் நேற்று தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சின்னசேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். கனியாமூர் கூட்டுரோடு பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது பின்னால் கள்ளக்குறிச்சியில் இருந்து ஆத்தூர் நோக்கி அதிவேகமாக வந்த கார் முருகேசன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் கார் டிரைவர் கோவையை சேர்ந்த சஞ்சீவ்குமார் என்பவர் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

Tags:    

மேலும் செய்திகள்