பாபநாசம்
பாபநாசம் வட்டம் ராஜகிரி கிராமம், மணல்மேடு கீழத்தெருவில் வசித்து வந்தவர் ராஜா (வயது45). விவசாயி. நேற்று கனமழை பெய்தபோது ராஜா தனது வீட்டில் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு பாபநாசம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி விசாரணை நடத்தி வருகிறார்.