விபத்தில் விவசாயி சாவு

நாங்குநேரி அருகே விபத்தில் விவசாயி இறந்தார்.

Update: 2022-07-28 19:30 GMT

நாங்குநேரி:

நாங்குநேரி அருகே உள்ள கலுங்கடியைச் சேர்ந்தவர் அதிசய முத்துராஜ் (வயது 75). விவசாயியான இவர் நேற்று முன்தினம் களக்காடு-நாங்குநேரி ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி தவறிவிழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அதிசய முத்துராஜ் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்