மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை
தியாகதுருகம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்டாா்.
தியாகதுருகம்;
தியாகதுருகம் அருகே உள்ள வீரசோழபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குமார்(வயது 47). விவசாயி. இவரது மனைவி வேம்பாயி. இவர் நேற்று முன்தினம் நெல் வயலுக்கு பூச்சி மருந்து வாங்கி தெளிக்குமாறு கூறி தனது கணவரிடம் ரூ.350-ஐ கொடுத்தார். பின்னர் வேம்பாயி, விளம்பாவூர் கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் பொரி விற்க சென்றார்.
பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது குமார், மதுவுடன் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். உடனடியாக அவர், சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே குமார் இறந்து வி்ட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து வேம்பாயி கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.