கிணற்றில் குதித்து விவசாயி தற்கொலை

கிணத்துக்கடவு அருகே கிணற்றில் குதித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-11-02 18:45 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே உள்ள வேலாயுதம்பாளையம் கல்லாங்காடு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அப்புசாமி (வயது 69) விவசாயி. இவர் கடந்த 3 மாதங்களாக தொண்டை புற்றுநோய் காரணமாக தண்ணீர் மற்றும் உணவு சாப்பிட முடியாமல் கடுமையாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வெளியே சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் திரும்பிவரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் அப்புசாமியை தேடினர். அப்போது அங்குள்ள கிணற்றின் அருகே அப்புசாமியின் பொருட்கள் கிடந்தது. உடனே கிணற்றிற்குள் பார்த்தபோது, அப்புசாமி இறந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர், கிணற்றுக்குள் இறங்கி அப்புசாமியின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்