பஞ்சலிங்க அருவிக்கு நீர் வரத்து அதிகரிப்பு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த திடீர் மழை காரணமாக பஞ்சலிங்க அருவிக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

Update: 2023-09-22 17:04 GMT


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த திடீர் மழை காரணமாக பஞ்சலிங்க அருவிக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

பஞ்சலிங்க அருவி

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. இந்த அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகள் நீர்வரத்தை அளித்து வருகிறது. இந்த சூழலில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை.

இதன் காரணமாக அருவிக்கு நீர்வரத்தை அளிக்கக்கூடிய ஆறுகள், ஓடைகள் வறண்டு விட்டன. இதனால் அருவியும் நீர்வரத்து இல்லாமல் வெறுமனே காட்சி அளித்து வந்தது. சுற்றுலா பயணிகள், பக்தர்கள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.

நீர் வரத்து அதிகரிப்பு

இந்த நிலையில் நேற்று அருவியின் நீராதாரங்களான குலிப்பட்டி, குருமலை பகுதியில் திடீரென மழை பெய்தது. இதன் காரணமாக பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து ஏற்பட்டது. இந்த தண்ணீர் அடிவாரத்தில் மும்மூர்த்திகள் எழுந்தருளி உள்ள குன்றை தழுவியவாறு திருமூர்த்தி அணையை அடைந்தது.

மேலும் அருவிக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை கோவில் பணியாளர்கள் கண்காணித்து வருகிறார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு அருவியில் நீர்வரத்து ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீர்வரத்து ஏற்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்