தொடர் மழையின் காரணமாக பூக்களின் விலை வீழ்ச்சி

தொடர் மழையின் காரணமாக பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்தது.

Update: 2022-12-13 18:37 GMT

நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கு விளையும் பூக்களை கூலியாட்கள் மூலம் பறித்து உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் குண்டுமல்லி கிலோ ரூ.3 ஆயிரத்திற்கும், முல்லை ரூ.2 ஆயிரத்திற்கும், சம்பங்கி ரூ.150-க்கும், அரளி ரூ.300-க்கும், ரோஜா ரூ.250-க்கும், செவ்வந்தி ரூ.250-க்கும் விற்பனையானது. நேற்று குண்டு மல்லி கிலோ ரூ.1,300-க்கும், முல்லை ரூ.1,000-க்கும், சம்பங்கி ரூ100-க்கும், அரளி ரூ.100-க்கும், ரோஜா ரூ.180-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் விற்பனையானது. தொடர் மழையின் காரணமாகவும், வரத்து அதிகரிப்பாலும் பூக்களின் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்